இடுகைகள்

காதல்

படம்
காதல் மனம் சார்ந்ததல்ல மண் சார்ந்தது.. மனம் சார்ந்ததென்றால் மனிதற்கு மட்டும் மகுடம் சூடியதாகிவிடும். மனிதர்க்குள் துளிர்விடும் காதல்,. நிலம் சேர்ந்ததோடு பறந்தும், விரிந்தும், சுழன்றும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆகாயம் மண்மீது கொண்ட தீராத காதல்- வரட்சியால் தேகம் துவண்டாலும் பெறுமழையால் பசுமை  பெற்றுத் தருவது காதலில் முதன்மையானது. தன்னை மகிழ்வித்த காதலனுக்கு பல வண்ண மலர்களால் புன்னகையுடன் வரவேற்கும் நிலமங்கை.... ஐம்புலங்களுக்குள்  கட்டுண்ட காதல்- இயற்கையுடனும் தஞ்சம் புகுந்ததை புலன்களைக் கடந்து வாழும் காதல் உணரச்செய்யும். வெண்மேகம் பூட்டிய பந்தலில் மறைந்திருக்கும் நட்சத்திரங்கள், மழைச்சாரலின் வருகைக்காக தாகத்தோடு காத்திருக்கும் மணல் மேடைகள், கதிர்கள் வருடியதால் மனமகிழ்ந்து துயிலுரியும் பனிக்குவியல்கள்... எண்ணில் அகப்படாத நிகழ்வுகள் காலனையும் கடந்து ஒளிரும் இயற்கை பரிமாற்றங்கள்.. நிழலின் அசைவுக்கும் கைக்கோர்த்து, மண்ணில் சிதரிய போதும் சிதறாமல்- நினைவில் வாழ்வது- காதல்

இந்தியா

படம்
மீன் வடித்த  விழியில் கூர் வாளின் வீரம் கண்டேன், புகழோடு, அறனும், செல்வமும் சேர்த்து கடல் தாண்டி கோலோச்சிய  மூவேந்தர் கண்டேன், பட்டின் பகட்டும், நெற்கலஞ்சியத்தின்  செழிப்பும் மண்ணில் இறுகிய ஆபரணங்களும், ஒன்றாய்  மெருகேறிய பாரதம் கண்டேன், உருவங்கள் மாறினாலும் உள்ளம் ஓன்றான பன்முக வழிப்பாட்டும், இறையும் கண்டேன், செருக்கோடு புவியில் வாழ்ந்த நான் வெண்தோல் அணிந்த கயவனின் கூட்டம் எக்குதிக்கும் பரவக் கண்டேன், நிழல் தேடிய அயலான், வேர் தகர்த்து மண்ணிற்குரிய அடையாளங்களை புதைக்கக் கண்டேன், விடுபடும் வேட்கையும், கலவரமும், பற்றும் கலந்து ஆண்டு முன்னூறு கடந்ததைக் கண்டேன், நள்ளிரவில் சுதந்திரம் வானுயரக் கண்டேன், நெடுங்கால விளங்குகள் அவிழ்க்கப்பட்டிருப்பதை மைந்தர்கள் கூத்தாடியதைக் கண்டேன், என் மக்கள், என் நிலம் என காலம் கடந்து செல்வதை உற்று நோக்கிய ஆகாயத்தின் மின்னல் நிலத்தில் பிளவுப்படுவதைக் கண்டேன் பெண்ணின் கண்ணியம் தூற்றப்படுவதைக் கண்டேன், கோபுரங்கள் உயர்ந்தாலும் சாமானியனின் கதவுகள் அடைப்பட்டிருப்பதைக் கண்டேன், நாகரீக மோகத்தில் நானென்ற சுய அடையாளம் இழப்பதைக் கண்டேன், மாற்றங்களின்...

நாழிகை

படம்
இருள் உறங்கும் செந்நிற மேடையில் தனியொரு விதையாய், உயிர்மட்டும் வேகம் கொள்ள இடையும் உணர்வும்- விழித்தோன்றுமுன் எனைவளர்க்க, உருவம் சேர்ந்த பின்னும் காட்சி மறையவில்லை முகவரியும் தென்படவில்லை. விரல்தோகை சாமரம் வீச இதமான சொற்றொடர்களில், அன்பெனும் மொழியை கற்றலானேன். எந்நிலம் அதிர வெப்பம் எனை சூழ்ந்ததால் எதிர்மறை ஆற்றல் எதுவென உணர்தலானேன். எனை சூழ்ந்த அனுக்கள் உரைந்து போக கனவிலும் கலையாத ஓவியம் காற்றில் நிலைக்குலைந்ததை ஏற்கலானேன். நானெனும் உருவம் முழுமதியின் வட்டத்திற்குள் கரை சூழ்ந்து வளர்ந்ததில்- முழுமையான எப்படைப்பும் கலங்கமின்றி ஒளி சேர்வதில்லை என அறியலானேன். பகல் வளர்க்கும் உயிர்கள் பகல் நுழையா கூட்டுக்குள் முழுமையாவதில்- இயற்கையின் ஆற்றல் சொல்லிலடங்காதவை என தீர்கமானேன். உன் அம்சமாய் அனைத்தும் அறிந்த எனக்கு உமையல்லாது யாவரும் போற்றப்படுபவர் என விழித்திறந்ததும் போற்றலானேன். செம்மேக ஓடையில் கலைந்திடாத என் தேகம் கலைந்திருக்கும் உன் வாழ்வில் கவங்கரையாய் வீற்றிருப்பேன் உன் விழியோரமாய் காவலனின் மறுப்பிறப்பாய்...... நாட்குறிப்பு எழுத்துக்களின் பறிமாற்றத்தில் உணர்வுகள் புதிதல்ல, எழுத...

மௌனம்

படம்
இந்தக் கவிதை மௌனத்தின் ஆழ்ந்த இருப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பார்வைக்குள் சிக்கிய நினைவுகள், வெளிப்பட முடியாத உணர்வுகள், சொற்களாக மாற மறுக்கும் வலி- இவை் மௌனத்தின் வழியாக வெளியில் செல்லும் நிலையை கவிதை காட்டுகிறது. கவிதை பார்வைக்குள் அகப்பட்ட  நினைவுகள் மனம் ஈர்க்காமல், தன் நிலை பகிராமல் வெளியேறும் வாசல்- மௌனம். உணர்வுகள் சிதைத்த வரிகள் உதடுகளின் உரசல்கள் கடந்து,சலனமில்லாமல் வெளியேறும் மொழி- மௌனம். அலையாய் நடை பழகும் சப்தம் தடை தகர்த்தால் நிலையான நிசப்தம் உள்வாங்கிவிடும். புயல் வசிக்கும் கூட்டுக்குள்,இடராமல் இமை  தோகை விரித்து காட்சிக்கு முரண்படாமல் வசிப்பது மௌனம். வெற்றியின் சாரல் புயல் மழையாய் கடந்தாலும் தனிமையின் தேடலில் புலன்கள் ஒன்றிணைய நிழலாய் தொடர்ந்து அமைதிக்கொள்வது மௌனம். இருள் உறங்கும் செந்நிற மேடையில் தனியொரு விதையாய், உயிர்மட்டும் வேகம் கொள்ள இடையும் உணர்வும்- விழித்தோன்றுமுன் எனைவளர்க்க, உருவம் சேர்ந்த பின்னும் காட்சி மறையவில்லை முகவரியும் தென்படவில்லை. விரல்தோகை சாமரம் வீச இதமான சொற்றொடர்களில், அன்பெனும் மொழியை கற்றலானேன். எந்நிலம் அதிர வெப...

புதல்

படம்
புதல் உள்ளடக்கம் 'புதல்' என்னும் சொல் புதுமையை குறிப்பதாகும். பழமையின் தேக்கத்தில் புதுமையின் வாசம் ஏற்புடையது. உயிர் கலந்த இயற்கையில் திரை விலகும் ஒப்பனைகள் யாவும் புதிதானவை. விடியும் பொழுதும், பொழுதின் நிறைவும், நிறையின் காட்சிகளும், காட்சிகளின் படிப்பினைகளும், படிப்பின் நெறிகளும், நெறி குன்றா விதிகளும், விதியில் கலந்த உறவுகளும், உறவில் ஒன்றினணந்த  கனவுகளும், கனவின் விழும்பில் பயணங்களும், பயணத்தின் முடிவில் புதிய அத்யாயமும்,புதுமையின் வரிசையில் முதன்மையானவை. கவிதை வெண்மேக சங்கமத்தில் வானவில் புதியது. இருள் தோற்ற பௌர்ணமியில் தூறல்கள் புதியது. சுழன்றோடும் காற்றுக்கு நளினம் புதியது. நிலம் உரைந்த பருவத்தில் மொட்டவிழ்ந்த பூக்கள் புதியது. இரவு நுழையா விழித்திரையில் கனவுகளின் காட்சி புதியது. பிணி பொருத்த செம்மண் வீதியில் வாழையின் செழுமை புதியது. வண்டாடும் பூஞ்சோலையில் நிறம் விழுங்கிய மலர்கள் புதியது. கவிஞன் தொடுத்த உயிர்மெய்யில் ஆயுதம் புதியது. இடறிய மணித்துளிக்குள் காலத்தோடு எழுவது புதியது. செவித்திகட்டா  வாய்மையின் அமைதி புதியது. உறவின் பாலம் கட்டவிழ்ந்தும் மனதில் இணைந்திருப்பது ...

இணைப்பு

படம்
இணைப்பு மனம் அறியா மலருக்குள் கதிரவன் கண்சிமிட்டும் பந்நிற குவியல்கள். திசை   அறியா காற்றுக்கு நிலம் ஆளும் பூமியில் எதிர்வினையற்ற அதிகாரம். வரையரையில்லா கடலுக்கு வான் உதிர்த்த நன்னீரில் அலைகளின் அரங்கேற்றம். காற்றில் மிதக்கும்  பறவைக்கு நிலம் மூழ்கும் பேரலையின் இரகசிய விண்ணப்பம். மீன் வடித்த விழித்தோகைக்குள் அகன்ற பூமியின் காட்சி கூடாரம். சிதறிய வண்ணங்களின் தொகுப்பில் வானுயர மகுடம் சூடும் வானவில். உறைவிடம் இல்லா உடலுக்குள், உயிர் சாய்க்கும் சுமைகள் தாங்கும்  மெல்லிய மனது. நிலையில்லா உறவுக்குள் நிழல் தேடி, வேரூன்ற நினைக்கும் வாழ்க்கை பயணம். பயணங்கள் தொடர, முன்னுரை வரையும் காலச் சக்கரம், முடிவுரை தேடி, இரவு பகல் வட்டமிடுகின்றன.

வறுமை

படம்
வறுமை  உள்ளடக்கம் இந்தக் கவிதை, வறுமையை ஒரு பொருளாதார நிலையாக அல்லாமல், மனித உடல், உயிர், சுவாசம், காலம் மற்றும் சமூக அடுக்குகள் அனைத்தையும் ஆக்கிரமிக்கும் முழுமையான அனுபவமாகப் பதிவு செய்கிறது. வாய்ப்புகள் இருந்தும் அனுமதி மறுக்கப்படும் சமூக வாசல்கள், அடிப்படை தேவைகளே அடைப்பாக மாறும் வாழ்வியல் சூழல், உயிர் காக்க வேண்டிய ஆதிமூல சக்திகள் உயிர் கெடுக்கும் பசியாக உருமாறும் நிலை ஆகியவை இதில் தீவிரமாக வெளிப்படுகின்றன. இறுதியில் மண்ணுக்குள் புதைந்திருக்கும் கம்பீரம் மேல்தளத்தை அசைக்க முனைவது மூலம், ஒடுக்கப்பட்ட வாழ்வின் அடக்கமில்லாத எதிர்ப்பும் மறைந்த வலிமையும் உணர்த்தப்படுகிறது. கவிதை முழுமை பெற்ற அடித்தளங்கள் காற்றில் பயணிக்க தேர்ந்தெடுக்கப்படாதவை- நிறைவாகிய வாசல் வரவேற்கவும் அனுமதி இல்லாதவை. வறுமையின் பிடியில்- செந்நீர் ஊற்று ஊடுருவ மறுக்கும், வெள்ளைக் கூட்டின் நகலாய் படர்ந்திருக்கும் மேலாடை சுருக்கமும் விரிவடைய மறுக்கும், ஆதி மனிதனின் உயிர் வளர்த்த நெருப்பு, பசியாய் உருவெடுத்து உயிர் கெடுக்க இசையும், உடல் சுமக்கும் பாதங்களும், தடம் காணும் கைகளும் பாரமென மண்ணில் இளைப்பாற நினைக்கும், வி...